ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது: இந்தியா

இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில்  எரிசக்தி வாங்குவது ஒரு சட்டபூர்வமான  பரிவர்த்தனை என்றும், அதனை அரசியலாக்க கூடாது என இந்தியா கூறியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2022, 04:54 PM IST
ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது: இந்தியா title=

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணய் வாங்க இந்திய ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ரஷ்யா உடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் வெளியாகின. 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல எனக்ஜ் கூறினாலும், அமெரிக்கா தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில்  எரிசக்தி வாங்குவது ஒரு சட்டபூர்வமான  பரிவர்த்தனை என்றும், அதனை அரசியலாக்க கூடாது என இந்தியா கூறியுள்ளது. 

"இந்தியா மாற்று எரியாற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த திட்டங்களை அனைத்து உற்பத்தியாளர்களும் மேற்கொள்வதை அரசு வரவேற்கிறது. இந்திய வர்த்தகர்களும் இது குறித்து ஆராய உலகளாவிய எரிசக்தி சந்தைகளுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்," என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.

"எண்ணெய் தன்னிறைவு கொண்ட நாடுகள் அல்லது ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் வர்த்தக தடை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக்கூடாது," என்று இந்ந்தியா  கூறியது.

"இந்தியா தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது. நமது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 85% (ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்கள்) இறக்குமதி செய்யப்பட வேண்டும். பெரும்பாலான இறக்குமதிகள் மேற்கு ஆசியாவில் இருந்து (ஈராக் 23%, சவுதி அரேபியா 18%) , UAE 11%)," வருகின்றன என இந்தியா மேலும் கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல என்பதை அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே சமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியாவின் நிலை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “இன்றைய சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு, வரலாற்றில் எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவுக்கான ஆதரவு என்பது, போரினால் ஏற்படும் பேரழிவுக்கான ஆதரவாகும் என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

உக்ரைன் ரஷ்யா பிரச்சனையில் இந்தியா யாரையும் ஆதரவிக்கவில்லை என்பதோடு, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து  20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News