எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் புதிய முதலாளியான எலான் மஸ்க் குறித்து ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களின் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். அவர் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார். மஸ்க்கின் இந்த முடிவை ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஆதரித்துள்ளதோடு, ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து ட்விட்டருக்கு ஏற்ற நபர் எலான் மஸ்க் என்று புகழ்ந்துள்ளார்.
மஸ்கின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜாக் டோர்சி
எலோன் மஸ்க் டிவிட்டருக்கு பொருத்தமான நபர் என்று ஜாக் டோர்சி தனது ட்வீட்டில் எழுதியுள்ளார். ‘அவரது ஐடியா மற்றும் சேவை இரண்டு மிக முக்கியமான காரணிகள். அவருக்கு ஆதரவாக இருக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். நான் ட்விட்டரை ஒரு நிறுவனமாகப் பார்க்கும் போது, இது என் வாழ்வின் ஒரே குறிக்கோள் மற்றும் மிகப்பெரிய வருத்தம் எனலாம். வால் ஸ்ட்ரீட் ட்விட்டரையும் அதன் விளம்பர மாதிரியையும் கைப்பற்றியது. வோல் ஸ்ட்ரீட்டின் பிடியில் இருந்து வெளியேறுவதற்கான முதல் படி இதுவாகும்.’ என அவர் பதிவிட்டுள்ளார்
பராக் அகர்வால் பற்றிய கருத்து
அவர் மற்றொரு ட்வீட்டில், 'ட்விட்டர் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எலோன் மஸ்க்கின் குறிக்கோள், பெரும்பாலான மக்கள் நம்பக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது. இது ஒரு நல்ல முயற்சி. பராக் அகர்வாலுக்கும் அதே குறிக்கோள்தான். அதனால்தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன். நிறுவனத்தை அசாத்தியமான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்ததற்கு இருவருக்கும் நன்றி. இது சரியான பாதை தான் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்.
மேலும் படிக்க | ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது.. ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால்
பங்கு ஒன்றின் விலை $54.20
ட்விட்டருடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, எலான் மஸ்க் முன்பு கூறியது போல், பங்குதாரர்கள் ஒரு பங்கிற்கு $54.20 பெறுவார்கள். கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்க எலோன் மஸ்க் முன்மொழிந்திருந்தார். ஆனால் சில விளம்பரதாரர்கள் அவரது முன்மொழிவை எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எலான் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை தடுக்கும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. ட்விட்டர் ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, எலான் மஸ்க் சமூக ஊடகங்களில் ட்வீட் செய்து தகவலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src="https://zeenews.india.com/tamil/live-tv/embed" width="100%">