வங்காளதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு  நடந்த நாராயகன்ச் கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்காளதேசத்தில் உள்ள நாராயண்கஞ்ச் மாநகர கவுன்சிலர் நஷ்ருல் இஸ்லாம். வக்கீல் சந்தன்குமார் சர்க்கார். இவர்கள் உள்பட 7 பேர் டாக்கா நாராயண்கஞ்ச் இணைப்பு ரோட்டில் காரில் சென்ற போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டு இவர்களது பிணங்கள் ‌ஷதாலக்யா ஆற்றில் வீசப்பட்டன


இந்த கொலையில் நாராயண்கஞ்ச் முன்னாள் கவுன்சிலர் நூர் உசேன், மற்றும் ராணுவ முன்னாள் தளபதி லெப்டினெட் கர்னல் தரீக்சயீத் உள்ளிட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு ஜெயில் தண்டனைகள் வழங்கப்பட்டன.