உலகின் முதன்மையான விண்வெளி நிறுவனமான நாசா புதன்கிழமை (மே 27) அன்று,   அமெரிக்க விண்வெளி வீரர்களை,   சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) அனுப்புவதற்கான பணியை அதுவும்  மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்தை  ஒத்தி வைத்தது.  நாசா ஒரு திட்டத்தை தள்ளிப் போடுவது கடந்த பத்து  வருடங்களில் இதுவே முதல் முறை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான வானிலை காரணமாக டெமோ -2 திட்டத்தை  ஒத்திவைக்க நாசா முடிவு செய்தது. அடுத்த கட்ட  முயற்சியாக  இது  சனிக்கிழமை பிற்பகல்  அமெரிக்க நேரம்  3:22 மணிக்கு  நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு.  செயல் படுத்தப்படும்.   “‘ நாங்கள் இன்று தொடங்கப் போவதில்லை. மோசமான வானிலை காரணமாக, ஏவுதல் தடைபட்டது.  எங்கள் அடுத்த  முயற்சி  மே 30 சனிக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 3:22 மணிக்கு  துவங்கும்.  .Live #LaunchAmerica coverage will begin at 11 am ET,”  அதாவது  லான்ச்  அமெரிக்கா கவரேஜ்  காலை 11 மணிக்கு  தொடங்கும் ” என்று நாசா ட்வீட் செய்துள்ளது.


புளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் தளத்திற்கு  இதை நேரில்  காண்பதற்காக பலரும்  கூடியிருந்தனர்.  ஸ்பேஸ்எக்ஸ் என்னும் , தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் ராக்கெட்  ஏவுதளத்தில்  நிறுத்தி  வைப்பட்டிருந்த நிலையில் திட்டம் கைவிடப்பட்டது.  


அமெரிக்க நேரப்படி புதன்கிழமை  மாலை 4:33 மணிக்கு விண்வெளி வீரர்களான டக்ளஸ் ஹர்லி மற்றும் ராபர்ட் பெஹன்கென் ஆகியோரை ஐ.எஸ்.எஸ்அதாவது   விண்வெளி நிலையத்திற்கு .செல்லும் திட்டத்திற்கு
தயாராக  இருந்தனர்.


‘டெமோ -2’ ஏவுதல் குறிப்பிடத்தக்க  ஒரு திட்டமாகும்.   ஏனெனில்   ஒரு தனியார் நிறுவனம் நாசா  குழுவினரின் உதவியுடன்  2011ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகிறது.  ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டின் முதல் ஏவுதல்   நிகழ்வு இதுவாகும்.    ஸ்பேஸ்எக்ஸ்   நிறுவனம்  பெருங்கோடீசுவரர் ,பில்லியனர் தொழிலதிபர் எலன் மஸ்க்கிற்கு சொந்தமானது என்பது  இங்கே கவனிக்க தக்க ஒரு  விஷயமாகும். .


" ஒரு   புயலோ  மின்னலோ  இல்லை, ஆனால் நாங்கள் ராக்கெட்டை ஏவினால் அது மின்னலைத் தூண்டி விடுமோ  என்ற கவலை இருந்தது" என்று நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறினார். எவ்வாறாயினும், அவர் நம்பிக்கையுடன்  இருந்தார்.   கவுண்டவுனுக்கு  பிறகு கைவிடப்பட்டதை  "ஒரு மதிப்பு வாய்ந்த ஒத்திகை" என்று கூறி  உள்ளார். .


"இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருந்தது,  இந்த விஷயங்களைச் செய்யும்போது,   இன்று  கூட  நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம் ," என்று அவர் நாசா தொலைக்காட்சியில்   உரையாற்றியபோது கூறினார்.


லான்ச் டைரக்டர் ,  மைக் டெய்லர், குறிப்பிடமுடியாத பல "வானிலை  அச்சுறுத்தல்கள் " இந்த பணியை நிறுத்தி வைக்க  காரணமாக இருந்தன என்று கூறியுள்ளார்.


53 வயதான விண்வெளி வீரர் ஹர்லி மற்றும் 49 வயதான பெஹன்கென் ஆகியோர் தங்கள் இருக்கையிலேயே  அமர்ந்து இருந்தனர்.  அதாவது இந்த  வரலாற்று   சிறப்பு  மிக்க  ராக்கட் ஏவுதல்  நிறுத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப்படும் வரை சுமார்  இரண்டு மணி நேரம் தங்கள் இருக்கைகளிலேயே  அமர்ந்திருந்தனர்.  "எல்லோரும் இன்று மிகச் சிறப்பாக செயலாற்றினார்கள்., இது ஒரு சிறந்த ஒத்திகை. சனிக்கிழமையன்று நாங்கள் அதை மீண்டும் செய்வோம்" என்று காப்ஸ்யூலில் இருந்து  வெளியேறிய  ஹர்லி கூறினார்.


(மொழியாக்கம் -சரிதா சேகர்)