கருந்துளை  (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது,  ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.   கருந்துளை ஒளியை கூட வெளியேற விடாமல் ஈர்த்துக் கொள்ளும் சக்தி படைத்ததால், அதனை நம்மால் பார்க்க இயலாது. ஆனால், விண்வெளியில் உள்ள தொலைநோக்கி மூலம் கருந்துளை எங்கு இருக்கிறது என்பதை அறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நமது பால்வீதியின் (Milky Way) மிகப்பெரிய கருந்துளையில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சாகிடேரியஸ் ஏ * (Sagittarius A* ) என்ற கருந்துளை அவ்வப்போது ப்ளோ டார்ச் போன்ற ஜெட் ஆற்றலை வெளியிடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இந்த கருந்துளையின் கசிவு காரணமாக, விண்வெளியில் ஹைட்ரஜன் நிறைந்த மேகங்கள் உருவாகின்றன.


ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!


இந்த கருந்துளையின் நிறை சூரியனை விட 41 மில்லியன் மடங்கு பெரியது


கருந்துளை நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ளது. இந்த கருந்துளையின் நிறை நமது சூரியனை விட 4.1 மில்லியன் மடங்கு அதிகம். சாப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெரால்ட் செசில் தலைமையிலான குழு இந்த கசிவைக் கண்டுபிடித்தது. தனது ஆராய்ச்சிக்காக, நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் பல வகையான தொலைநோக்கிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அலைகளின் நீளங்களை ஆய்வு செய்து முடித்துள்ளார்.


தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த தரவுகள் 


இந்த ஆராய்ச்சிக்கான தரவு ஹப்பிள் மற்றும் சந்திரா தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் உள்ள ALMA ரேடியோ தொலைநோக்கி மற்றும் நியூ மெக்சிகோவில் உள்ள வெரி லார்ஜ் ஏரே (VLA) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது என்று குழு விளக்கியது. ஹப்பிள் இன்னும் ஜெட்டின்  புகைப்படம் எடுக்கவில்லை, அதனால்தான் அதை 'ஃபாண்டம் ஜெட்' என்று அழைக்கிறது. இருப்பினும், இந்தச் சுடர் மாபெரும் ஹைட்ரஜன் மேகங்களை உருவாக்குகிறது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய ஹப்பிள் உதவியுள்ளது.


ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்


ஹைட்ரஜனின் ஒளிரும் மேகங்களை ஹப்பிள் கண்டு பிடித்தது


ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தும் வானியலாளர்கள் கருந்துளைக்கு அருகில் ஹைட்ரஜனின் ஒளிரும் மேகத்தை கைப்பற்றியதாக நாசா தெரிவித்துள்ளது. கருந்துளையில் இருந்து வெளிவரும் மெல்லிய சுடர் மெதுவாக சுற்றியிருக்கும் மேகங்களை மறைக்கிறது என்று கூறினார். இந்த சுடர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கருந்துளையில் இருந்து பிறந்தது. 4.1 மில்லியன் சூரியன்களின் நிறை கொண்ட கருந்துளையானது ஒரு உறங்கும் அசுரன் என்பதற்கான ஆதாரம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!


கருந்துளை கசிவு நிகழ்வு அரிதானது


அவற்றின் வலுவான ஈர்ப்பு விசையின் காரணமாக, கருந்துளைகள் வாயு, பிளாஸ்மா, தூசி மற்றும் பிற துகள்கள் போன்ற பொருட்களை சுழலும் வட்டிற்குள் இழுக்கின்றன. இந்த வட்டு 'accretion disc'என்று அழைக்கப்படுகிறது. அனைத்து பொருட்களும் கருந்துளையை நோக்கி இழுக்கப்படுகின்றன என்பது பொதுவான நம்பிக்கை, ஆனால் இங்கே ஜெட் அதிலிருந்து எதிர் திசையில் பாய்கிறது என்று நாசா கூறியது. நாசா இதற்கு  searchlight beam என்று பெயரிட்டுள்ளது.


ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR