மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் `Artemis 1` ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டில் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, `Artemis 1` திட்டத்தை துவங்கியது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ் 1' திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த ஆக்ஸ்ட் மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி போடப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3வது என்ஜின் செயலிழந்த நிலையில், ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசா ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, தொழில் நுட்பகோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை மீண்டும் செலுத்தும் முயற்சியாக 23-ம் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்து, பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் குறிப்பிட்ட தேதியில் ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறிய நாசா, வரும் 27-ம் தேதி அன்று ராக்கெட்டை செலுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப முடியாதா? ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு
ஆர்டெமிஸ் - 1 விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லாது; நிலவில் இறங்காது. ஆனால் சோதனை முயற்சியாக பொம்மைகளை ஏற்றிச் சென்று பூமிக்கு திரும்பும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 97 கி.மீ., அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ள நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகே ஒரியன் விண்கலத்தை பறக்க விட நாசா திட்டமிட்டு உள்ளது. முன்னதாக ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில சிக்கல்களும் கண்டறியப்பட்டு சீர் செய்யப்பட்டன என நாசா மேலும் தெரிவித்தது.
பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாவது ஏவுகணை முயற்சிக்கு முன்னதாக நாசாவின் ஆர்ட்டெமிஸ் I மெகா மூன் ராக்கெட் வெள்ளிக்கிழமை ஏவுதளத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்ட்டெமிஸ் I ராக்கெட்டை பூமியில் இருந்து ஏவுவதற்கான மற்றொரு முயற்சிக்கு விண்வெளி நிறுவனம் தயாராகிறது. நவம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாசாவின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!
மேலும் படிக்க | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ