தன் மனைவியின் உடல் நலம் சீறடையா பிராத்திக்குமாறு தனது தொண்டர்களை வெண்டியுள்ளார் நவாஸ் செரீப்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்-ன் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிக்கைப் பெற்று வருகின்றார். அவரது உடல் நிலை சீறடைய பிராத்தனை செய்யுமாறு தன் தொண்டர்களை வெண்டிக்கொள்வதாக சிறையில் இருக்கும் செரீப் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த ஜூலை 13-ஆம் நாள் ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸை லாகூர் விமான நிலையத்தில் வைத்து தேசிய பொறுப்புடைமை முகமை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் ராவல்பிண்டி அடியலா சிறைக்கு அனுப்பி வைத்தது.


சம்பவத்தன்று நவாஸ் செரீப்பை கைது செய்ய பாதுகாப்பு படை திட்டமிட்ட நிலையில், லாகூரை நோக்கி அவரது கட்சியின் தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். இதனால் லாகூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து லாகூரில் மொபைல் சேவை மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதற்கிடையே பாதுகாப்பு படையினர் நவாஸ் செரீப் ஆதரவாளர்கள் 300 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் சலசலப்பு ஓய இரண்டு நாட்கள் தேவைப்பட்டது.


பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீப் கடந்தாண்டு ஜூலை மாதம் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


இதனால் அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வரும் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாசுடன் லண்டன் சென்றார். பயணம் முடிந்து பாகிஸ்தான் திரும்பிய இருவரையும் லாகூர் விமான நிலையத்தில் வைத்து தேசிய பொறுப்புடைமை முகமை கைது செய்தது.


இந்நிலையில் தற்போது சிறையில் இருக்கும் செரீப் தனது மனைவியின் உடல் நலம் குனமடைய பிராத்திக்குமாறு தனது தொண்டர்களை வேண்டியுள்ளார்.