சீனாவின் அராஜகம், திபெத் மக்களின் பரிதாபம்: பகீர் Report!!
கிழக்கு திபெத்திலிருந்து, 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 திப்பெத்தியர்களை சீன அதிகாரிகள் வலுக்கட்டாயமாக மற்ற ஒரு குடியிருப்பிற்கு மாற்றியுள்ளார்கள் என வட்டாரங்கள் தெரிவிகின்றன.
கிழக்கு திபெத்திலிருந்து (Tibet), 13 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60 திப்பெத்தியர்களை சீன அதிகாரிகள் (Chinese Authorities) வலுக்கட்டாயமாக மற்ற ஒரு குடியிருப்பிற்கு மாற்றியுள்ளார்கள் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. இடம் மாற்றப்பட்ட திபெத்தியர்கள் (Tibetans), கிழக்கு திப்பெத்தின் பாயுல் கௌண்டியைச் சார்ந்த டோல்யிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் கிராமத்திலிருந்து ஜூன் 24 ஆம் தேதி, பாயுல் கௌண்டியின் மற்றொரு குடியிருப்பிற்கு மாற்றப்பட்டனர்.
இந்த குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளின் கூரைகளில் சீனாவின் (China) கொடிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளுக்குள், சீன அதிபர் ஷி ஜின்பிங் உட்பட பல சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2018 முதல் 2019 வரை, கிழக்கு திப்பெத்திலிருந்து, திப்பெத் தன்னாட்சி பகுதியாக ஆளப்படும் பகுதிக்கு, சீன அதிகாரிகள் மூலம், சுமார் 400 திப்பெத்திய குடும்பங்களை சீன அரசாங்கம் வலுக்கட்டாயமாக இடம் மாற்றியது.
ஜூலை 2019-க்குள், மூன்று வெவ்வேறு திப்பெத் நகரங்களிலிருந்து சுமார் 2693 திபெத்தியர்களை பாஷோ கௌண்டியின் பேமா நகரத்திற்கு சீன அரசாங்கம் இடம் மாற்றியதாக ஃப்ரீ திப்பெத் கூறியுள்ளது.
திப்பெத் சீனாவின் ஓர் அங்கம் என சீனா கூறி வருகிறது. திப்பெத்திலிருந்து வெளியே இருந்தபடி விவகாரங்களை கவனித்து வரும் திபெத் அரசாங்கம், திபெத் ஒரு சுதந்திர பிராந்தியம் என்றும் சீனா அதை சட்டத்திற்கு புறம்பான விதத்தில் ஆக்கிரமித்துள்ளது என்றும் கூறுகிறது.
ALSO READ: அடம்பிடிக்கும் சீனா, தயார் நிலையில் இந்தியா, பதட்டத்தில் லடாக்!!
1950 ஆம் ஆண்டு, சீனாவின் புதிதாக நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி, திபெத்தை ஆக்கிரமித்தது .திபெதின் அபரிமிதமான இயற்கை வளங்களும், செயலுத்தி ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியாவுடனான அதன் எல்லையும் சீன ஆகிரமிப்பிற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. தற்போது பெரும்பாலான திபெத் சீன ஆக்கிரமிப்பில் உள்ளது என ஃப்ரி திபெத் (Free Tibet) தெரிவிக்கிறது.
சீன ஆட்சிக்கு எதிராக திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். திபெத்தியர்களின் அடையாளம், சுதந்திரம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும் என்பதும், தலாய் லாமா (Dlai Lama) திபெத்திற்கு திரும்ப வேண்டும் என்பதும் திபெத்தியர்களின் கோரிக்கைகளாக உள்ளன. சிலர் குறிப்பாக சீனாவிடமிருந்து விடுதலைப் பெற போறாடுகிறார்கள். இதை திபெத்தியர்கள் “ரேங்ஸென்” (Rangsen) என்று அழைக்கிறார்கள்.