நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன் வந்த  போது அதை நிராகரித்து, ஒரு பொதுக் கூட்டத்தில் ஜிண்ட்ஸி மண்டேலே கடிதத்தை வாசித்த  நிகழ்விற்கு பிறகு அவர் பலராலும் பரபரபாக பேசப்பட்டார்.


Sopore என்கவுண்டர்: பயங்கரவாதிகள் பெரிய தாக்குதல் நடத்த இருந்ததாக அதிர்ச்சி தகவல்


 


ஜோகன்னஸ்பர்க்( Johannesburg): தென்னாப்பிரிக்காவின் நிறவெறியை எதிர்க்கும் தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela) மற்றும் வின்னி மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா, தனது 59 வயதில் இறந்து விட்டார். ஜிண்ட்ஸி மண்டேலா ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை இறந்ததாக தென்னாப்பிரிக்கா ஒளிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.


அவர் இறக்கும் போது டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்க தூதராக பணியாற்றி வந்தார். 1985 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுவிக்க வெள்ளை சிறுபான்மை அரசு முன்வந்தபோது மண்டேலாவின் மகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார்.


கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!


 


நிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் மண்டேலாவை விடுவிக்க முன் வந்தது. ஆனால், அதற்கு இனவெறிக்கும் எதிரான போராட்டத்தை கை விட வேண்டும் என கோரியட்து. அதனால் அதை நிராகரித்து, ஒரு பொதுக் கூட்டத்தில் ஜிண்ட்ஸி மண்டேலா கடிதத்தை வாசித்த  நிகழ்விற்கு பிறகு அவர் பலராலும் பரபரபாக பேசப்பட்டார்.


இந்த நிகழ்வு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.