Nepal: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று நேபாள பிரதமர் KP ஷர்மா ஓலி ராஜினாமா
நேபாளத்தில் காபந்து அரசுக்கு பொறுப்பேற்றிருந்த பிரதமர் சர்மா ஓலி ராஜினாமா செய்தார்.
"உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை எங்கள் கட்சி மதிக்கிறது" என்று கூறிய நேபாள அரசின் காபந்து பிரதமர் கே.பி. சர்மா ஓலி, பதவி விலகினார்
நேபாளத்தின் காபந்து அரசின் பிரதமராக பொறுப்பு வகித்த கட்கா பிரசாத் சர்மா ஓலி (Khadga Prasad Sharma Oli, இன்று (ஜூன் 13ம் தேதி) ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தியூபா (Sher Bahadur Deuba) பிரதமராக நியமிக்கப்படுவார், அவர் இன்று (ஜூலை 13) நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.
செவ்வாய்க்கிழமைக்குள் டியூபாவை புதிய பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு ஜூலை 12 ம் தேதி நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து காபந்து பிரதமர் பதவியில் இருந்து கே.பி. ஷர்மா ஓலி விலகினார்.
Also Read | The Country of Lakes: ஏரிகளின் நாடு பின்லாந்து பற்றிய முக்கிய தகவல் தெரியுமா?
பிரதமர் சர்மா ஓலியின் தலைமையிலான நேபாள அரசுக்கு முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொண்டதை அடுத்து ஓலியின் அரசு பெரும்பான்மையை இழந்தது.
அதனையடுத்து ஏற்பட்ட அரசியல் மாறுதல்களால், புதிய அரசு பதவியேற்கும் வரை கே.பி. ஷர்மா ஓலி, காபந்து அரசின் பிரதமராக தொடர்ந்தார். தற்போது அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஓலி பதவி விலகியிருக்கிறார்.
Also Read | ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR