பின்லாந்து, உலகின் அழகான நாடுகளில் ஒன்று. வடக்கு ஐரோப்பாவின் ஃபென்னோஸ்கேனடியன் பகுதியில் அமைந்துள்ள இந்த நாடு 'ஏரிகளின் நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இதற்குக் காரணம், இங்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன, நாட்டின் அழகைக் கூட்டுவதே ஏரிகள் தான். ஏரிகளின் நாடு வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் வைத்திருக்கிறது.
வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடியரசு நாடான பின்லாந்தின் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ரஷ்யா, சுவீடன், நார்வே, போன்ற நாடுகள் புடைசூழ அமைந்திருக்கிறது பின்லாந்து. இந்நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி ஆகும்.
இந்த நாடு அதன் வானிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. பின்லாந்தின் வானிலை மிகவும் ரம்மியமானது, மனம் குளிர வைப்பது. கோடைகாலத்தில், இரவு 10 மணிக்கும் கூட மாலை நேரம் போல வெளிச்சம் இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் பகலிலும் இருள் கவிந்து காணப்படும். மதிய நேரத்தில்தான் சூரியனின் வெளிச்சம் சிறிந்து நேரம் பின்லாந்தை தரிசிக்கும்.
Also Read | ஒண்ணா நின்னு கெத்தா சமாளிப்போம்: உறுதி பூண்டன சீனாவும் வட கொரியாவும்
பின்லாந்தில் 'டோர்னியோ' ('Torneo')என்று அழைக்கப்படும் மிகவும் தனித்துவமான கோல்ஃப் மைதானம் உள்ளது, அதில் பாதி பின்லாந்திலும் பாதி ஸ்வீடனிலும் உள்ளது. இந்த கோல்ஃப் மைதானத்தில் மொத்தம் 18 துளைகள் உள்ளன, அவற்றில் ஒன்பது பின்லாந்திலும், மீதமுள்ள ஒன்பது சுவீடனிலும் உள்ளன. இங்கே மக்கள் பெரும்பாலும் விளையாடும்போது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்கிறார்கள்.
பின்லாந்து மற்றுமொரு வித்தியாசமான விஷயத்திற்கு பிரபலமானது. கணவன், தனது மனைவியின் முதுகில் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி பின்லாந்தில் பிரபலமானது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவரது மனைவியின் எடைக்கு சமமான பீர் பரிசாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற போட்டி அநேகமாக உலகில் வேறு எங்கும் இருக்காது.
பின்லாந்தின் ஒரு சட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இங்கு போக்குவரத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் விதம் வித்தியாசமானது. விதிகளை மீறுபவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.
மொபைல் தயாரிப்பாளரான நோக்கியா (Nokia) மற்றும் ரெவியோ (Revio) நிறுவனங்கள் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவை.
Also Read | ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR