நாட்டில் கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதற்காக நேபாள அரசு வெளிநாட்டில் இருந்து வரும் மலையேற்ற வீரர்கள் மற்றும் மலையேறுபவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுற்றுலாப் பயணிகளிடம் தற்போது நேபாள சுற்றுலா அமைச்சகம் நுழைவு விசா விவரங்களைக் கேட்கும். அதுமட்டுமல்ல, ஏழு நாள் தனிமையில் இருந்ததை உறுதி செய்வதற்காக, ஹோட்டலில் தங்குவதற்கான முன்பதிவு ஆவணம் உட்பட 72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும் அவர்கள் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.


மலையேறும் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், அவர் குணமாகி விட்டார் என்று மீண்டும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தப்படும் வரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.


வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 5,000 டாலர் அளவிலான மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அதை உறுதி செய்வதற்காக நேபாள அரசு சுற்றுலா ஆவணங்களையும் சரிபார்க்கும்.


கொரோனாவால் 481 பேர் உயிரிழந்தது உட்பட நேபாளத்தில் இதுவரை 74,745 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதால் இமயமலையில் மலையேறுபவர்களுக்கு நேபாள அரசு ஐந்து மாதங்கள் வரை தடை விதித்தது.  ஜூலை 30ஆம் தேதி முதல் மலையேறுபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.  


நேபாளத்தின் பொருளாதாரமானது, சுற்றுலா மற்றும் மலையேறுதலை பெரிதும் சார்ந்துள்ளது. அதன் முக்கிய வருவாய் ஆதாரமான மலையேறும் தொழிலை பாதித்த கொரோனாவால் நேபாளத்தின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் ஒரு நபருக்கு 11,000 டாலர்கள் என்ற கட்டணத்தில் 381 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியது.


மேலதிக தகவல்களுக்கு | COVID-19 இறப்புகள் அறிவிக்கப்பட்ட 1 million-ஐ விட அதிகம்: பீதியை கிளப்பிய WHO


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR