புதுடெல்லி: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) , கடந்த வாரம் வெளியிட்ட உத்தரவு தொடர்பாக கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.  தற்போது, நாட்டின் பாராளுமன்றத்தை கலைக்க, அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"செவ்வாயன்று பிரதமர் ஒலி (KP Sharma Oli)  வெளியிட்ட அரசியலமைப்பு கவுன்சில் சட்டம் தொடர்பான உத்தரவை வாபஸ் பெற பிரதமர் ஓலி அழுத்தம் கொடுக்கப்பட்டது. உத்தரவை வெளியிட்ட உடனேயே அதற்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் கொடுத்தார்" என்று காத்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இந்த ஆணையை மாற்ற பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் செய்தி வெளியாகி இருந்தது.


நேபாளத்தின் (Nepal) அரசியலமைப்பு கவுன்சில் பிரதமரின் தலைமையில் உள்ளது. இதில் தலைமை நீதிபதி, சபாநாயகர், தேசிய சட்டமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். இது பல்வேறு அரசியலமைப்பில் செய்யப்பட்டும் முக்கிய நியமனம் குறித்த பரிந்துரைகளை அளிக்கிறது.


இதற்கிடையில், பிரதமரின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இன்று பெரும்பான்மை வலுவை இழந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் (Corona virus) நெருக்கடியை சரியாக கையாளவில்லை என்றும், பொருளாதார வெகுவாக தனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பிரதமர்  கேபி. சர்மா ஓலி மீது கடும் நெருக்குதல் கொடுக்கப்பட்டது. பிரதமர் பதவியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


ALSO READ | உணவகத்தில் 15 ஆயிரம் பில்லிற்கு பல லட்சம் டிப்ஸ் கொடுத்த கர்ண பிரபு..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR