நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டதாக நியூசிலாந் பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். 


இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினர் பலத்த முயற்ச்சி மேற்கொண்டனர். இந்த தாக்குதலை குறித்து காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த காணொளி உண்மையா? இல்லையா? என்று அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும் மட்டும் இது வரை தெரியவந்துள்ளது.


இந்த கொடுர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.