இனி தேவையற்ற பிளாஸ்டிக் பைகளை இப்படியும் பயன்படுத்தலாம்!
பாலிதின் கவர்களைக் கொண்டு ஸ்கூல் பேக், ரெயின் கோர்ட் போன்றவற்றை செய்து அசத்தும் ஆப்ரிக்க இளைஞர் ஓலேமி சாம்சன்!
சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருப்பது பிளாஸ்டிக், பாலிதின் கவர்கள். இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி ஸ்கூல் பேக் முதல் கார் கவர் வரை ஏராளமான படைப்புகளை தயாரித்து அசத்தியுள்ளார் ஆப்ரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, நைஜீரியாவின் லாகோஸ் நகரம் சமீபகாலமாக மாசுபட்ட நகரமாக மோசமான நிலைக்கு மாறிவருகிறது. இங்கு தினமும் 9 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து அவைகளுக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார் நைஜீரியாவைச் சேர்ந்த ஓலேமி சாம்சன் என்பவர்.
இவர் இந்த தேவையற்ற கழிவு பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து துணி, ஸ்கூல் பேக், தொப்பி, ரெயின் கோர்ட் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.துவக்கத்தில் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஆடை அணிவதில் பல தயக்கங்கள் இருந்து வந்தது. ஆனால், தற்போது காலகட்டத்தில் சாப்பிடும் தட்டு முதல் பயன்படுத்தும் அனைத்தும் பொருட்களும் பிளாஸ்டிகாகவே வந்துவிட்டது.
பிளாஸ்டிக்கில் மாணவர்களுக்கு பை தயாரித்து கொடுத்தபோது பள்ளியில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற அனுபவத்தை கூறினார்கள். இதிலிருந்து ஆக்கப்பூர்வமான பொருட்களை படைக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக நைஜீரிய தொழிலாளி ஒலாயினி சாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து ஒலாயினி சாம்சன் பேசியபோது.....!
லாகோஸ் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறேன். நகரின் பெரிய வணிக வளாகம் முதல் சிறு கடை வரை இவரின் சேகரிப்பு பயணம் தொடங்குகிறது. தண்ணீர் பாக்கெட் முதல் கடினமான பிளாஸ்டிக் பாட்டில் வரை எந்த வகையானா பிளாஸ்டிக்காக இருந்தாலும் அதனை சேகரித்து, அதன்பின் அதனை சுத்தம் செய்து தரத்திற்கு ஏற்ப பிரித்தெடுத்து தன் கற்பனைக்கு ஏற்றவாறு ஆடைகளை வடிவமைப்பேன்.
ஆயிரக்கணக்கான தண்ணீர் பாக்கெட் காலி கவர் கொண்டு கார் கவர்களையும் உருவாக்கியுள்ளேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் நல்ல லாபம் தரக்கூடிய வியாபாரமாக உள்ளது என்று கூறுகிறார்.