உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. ஆனால், இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளன. அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே மறைமுக போர்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது. ஏனெனில் இந்த தலைவர்கள் நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர். நைஜரின் புதிய ராணுவ ஆட்சியினராக சிறை வைக்கப்பட்டுள்ள அதிபரை விடுவிக்காவிட்டால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஆட்சியை திரும்ப ஒப்படைக்கத் தவறினால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு (ECOWAS) அச்சுறுத்தல்  விடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காலக்கெடு விதித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை நைஜரின் வான்வெளி மூடப்பட்டது, நைஜீரிய இராணுவ சதித் தலைவர்களுக்கு அதிகாரத்தை விடுவிப்பதற்கும் நாட்டின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கும் ஆப்பிரிக்க நாடுகளின் குழுவால் காலக்கெடு விதிக்கப்பட்டது.


அந்த காலக்கெடு காலாவதியானதால், அண்டை நாடுகளின் தலையீடு அச்சுறுத்தல்  காரணமாக நைஜரின் வான்வெளி மூடப்பட்டது. நைஜீரிய  ராணுவ தலைவர் கர்னல் மேஜர் அமடோ அப்த்ரமேனின்  வெளியிட்ட வீடியோ அறிக்கையில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.


Economic Community of West African States (ECOWAS) எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, இவை மொத்தம் 15  நாடுகள், மேற்கு ஆப்ரிக்காவில் மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற பலமான நாடுகள் இல்லாமல் கானா, பொக்கினோ போசோ, மாலி எனும் குட்டிகுட்டி நாடுகள் கொண்ட அமைப்பு. சில வல்லுநர்கள் ECOWAS அமைப்பினை, மேற்கத்திய நட்பு நாடுகள் தூண்டிவிடுதாக நம்புகிறார்கள் - குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ். 


மேலும் படிக்க | விண்வெளியின் மாயங்களை மந்திரஜாலமாய் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்


ECOWAS இன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது நைஜீரியாவின் அதிபர் போலா டினுபுவின் கண்ணோட்டத்தில் இது தெளிவாகிறது. டினுபு இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும் சில நாடுகளின் தலைவர்கள் இந்த நடவடிக்கையால் பயப்படுகிறார்கள் என்று அவர் நம்புகிறார். நிபுணர்களின் கூற்றுப்படி, அமைப்பின் சில தலைவர்கள் தங்கள் நாட்டுப் படைகளுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து எந்த பயனும் கிடைக்காது என்று அச்சம் கொள்கிறார்கள்


இந்நிலையில், நைஜர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் பாஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி அப்துரஹ்மானே டிசியானி புதிய அதிபராக பதவி ஏற்று உள்ளார். இதையடுத்து நைஜரில் இருந்து பிரான்ஸ், அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. இதையடுத்து நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் வாக்னர் படை சென்று உள்ளது. புடின் உத்தரவின் பெயரில் அங்கு சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது வாக்னர் படை.


நைஜர் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அங்கிருக்கும் கனியவளங்களை பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறன என கூறப்படுகிறது.  அந்நாட்டிலிருந்து யூரோனியம் மற்றும் தங்கம் போன்ற இயற்கைத் தாதுக்களை டன் டன் கணக்கில் பிரான்ஸ் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது.


மேலும் படிக்க | விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா... தயாராகும் சீன விண்வெளி நிலையம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ