இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிராகரிப்பு...நாடாளுமன்றம் கலைப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். பின்னர் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பணவீக்கம் , கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 164 எம்.பிக்கள் உள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. கடந்த 30-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடிய நிலையில், நம்பிக்கை இல்லாத்தீர்மானம் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஆளுங்கட்சி இதனை ஏற்றுக்கொள்ளாததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | நீங்கள் பிரதமராகாமல் இருந்திருந்தால்?..இம்ரான் கானை சாடிய முன்னாள் மனைவி
இதனைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி துணை சபாநாயகர் அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெளிநாட்டு சதி எனவும், பாகிஸ்தானை யார் ஆள வேண்டும் என்பதை பாகிஸ்தானியர்களே நிர்ணயிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், தேர்தலுக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அதிபர் ஆர்ஃப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் எனவும் பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR