அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் இந்தியாவில், மார்க்கெட்டிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை பணியாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள், தங்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.


இதற்கிடையில், எலோன் மஸ்க் இன்று டிவிட்டர் நிறுவன பணி நீக்கங்களுக்கு பதிலளிக்கையில், ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்கள் இழப்பை நிறுவனம் சந்தித்து வரும் வேளையில், வேறு வழியில்லை என்று கூறினார். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, சட்டப்பூர்வமாக வழங்கும் இழப்பீட்டு பலன்களை விட 50 சதவீதம் கூடுதல் இழப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எலான் மஸ்க் கூறினார்.


முன்னதாக, டிவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 (ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது. எலோன் மஸ்க் புளூ டிக் வைத்திருக்கும் மக்கள், பிற கணக்குகளை வைத்திருப்பவர்களை விட நம்பகத் தன்மை அதிகம் உள்ளவர்கள் என்பதை உணர்த்துகிறது.


ட்விட்டரில் மொத்தம் இருந்த 7500 பணியாளர்களை பாதியாக குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்குறைப்பு குறித்த முழு விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. ட்விட்டர் இந்தியாவும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ