புதுடெல்லி: பசியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Prize 2020) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பரிசின் மதிப்பு பத்து மில்லியன் ஸ்வீடிஷ் க்ரௌன்கள், அதாவது சுமார் 1.1 மில்லியன் டாலர் ஆகும். இது டிசம்பர் 10 அன்று ஒஸ்லோவில் (Oslo) வழங்கப்படும்.


நோபல் கமிட்டியின் தலைவரான பெரிட் ரைஸ்-ஆண்டர்சன் ஒஸ்லோவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் பட்டினி என்ற கொடுமையை கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிகரித்துள்ளது என்றும், அவர்களுக்கு உணவளிக்க தேவையான நிதி உதவியை WFP மற்றும் பிற உதவி நிறுவனங்கள் பெறுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் நோபல் குழு தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு 218 நபர்கள் மற்றும் 107 அமைப்புகள் உட்பட 318 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஸ்வீடிஷ் இளவயது ஆர்வலர் துன்பெர்க், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சிலராவர்.


ALSO READ: வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது! யார் அந்த பெண் விஞ்ஞானிகள்


நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் பெயர்கள் எப்போதும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. இருப்பினும், பெயர்களைச் சுற்றியுள்ள ரகசியம் ஒருபோதும் ஊகங்களை நிறுத்தியதில்லை.


முன்னதாக, வேதியியல்ல துறையில் 2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இமானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு அவர்கள் மேற்கொண்ட மரபணு (CRISPR-Cas9 DNA snipping) ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


மேலும், ஹெபடைடிஸ் சி வைரஸைக கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசு திங்களன்று அறிவிக்கப்பட்டது. 


ALSO READ: Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR