Nobel Prize 2021: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சாதனைகள் மேற்கொள்பவர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சாதனைகள் மேற்கொள்பவர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இலக்கியம், அமைதி, வேதியில் ஆகிய துறைகளில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize) அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா D.அங்ரிஸ்ட் (Joshua D. Angrist) மற்றும் கொய்டோ W.இம்பென்ஸ் (Guido W. Imbens)ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ஸ்வீடனை சேர்ந்த டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்கார தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் இந்த பரிசு உருவாக்கப்பட்டது. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் செய்யப்பட்ட சாதனைகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகின்றது.
1901 முதல் இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பட்டியலில் பொருளாதாரமும் சேர்க்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் ஒப்பிட முடியாத மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலக அளவில், மிகவும் உயர்ந்த, மதிப்புமிக்க விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அளிக்கப்படும் விருதுக்கான அறிவிப்பு சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டிலும் அறிவிக்கப்படுகிறது.
நோபல் பரிசில் என்ன கிடைக்கும்?
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு, தங்க பதக்கமும், ரூ.8½ கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.
ALSO READ: 2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR