ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2016-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேரும் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. முதலில் மருத்துவ நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் நியூட்ரினோக்கள் குறித்த ஆய்வுகளுக்காக டகாகி கஜிதா மற்றும் ஆர்தர் பி.மெக்டோனல்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.