கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திடீர் என்று செய்யப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 
கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகவும் சிறந்த நடவடிக்கை ஆகும். உயர்ந்த மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இல்லாதது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் என்று கூறியிருந்தார்.


இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணரான, முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இவருக்குத்தான் இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


அனால் அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலருக்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.


இந்நிலையில் ரிச்சர்ட்டின் இந்த கருத்துக்கு பதிலாக ஒருவர் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த பதிலை பார்த்து ரிச்சர்ட் "really? Damn" என்ற மோசமான கருத்து ஒன்றை தெரிவித்தார். இதன் மூலம் அவர் 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராக இருக்கிறார் என்பது தெரிந்தது.


இந்த இரண்டு கருத்துக்களையும் இந்திய மக்கள் வெவ்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பாஜக கடசிக்கு சாதகமாக பேசும் நபர்கள், ரிச்ச்ர்ட் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முதலில் கூறிய கருத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு இரண்டாவது கூறிய கருத்தை பற்றி பேசாமல் இருந்தனர்.