உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வடகொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக வடகொரியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளார்.


நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன.


இதன் காரணமாக உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.