வடகொரியாவின் மிரட்டல்; நடுங்கும் ஜப்பான்
வடகொரியா அதன் கிழக்குக் கரையோரம் உள்ள தளத்திலிருந்து நான்கு ஏவுகணை ஏவி சோதனை செய்துள்ளது.
இதன் அருகில் தான் ஜப்பான் கடல் பகுதியில் உள்ளது. இதனால் வட கொரியா ஏவுகணை சோதனையை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கண்டித்துள்ளார். பாய்ச்சப்பட்ட நான்கு ஏவுகணைகளில் மூன்று ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் விழுந்துள்ளன.
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்திவருகிறது. இது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முடியவில்லை. அதைப்பற்றி ஆராய்ந்து வருகிறோம் என தென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.