மர்மங்கள் நிறைந்த தேசமான வடகொரொயாவில் நடப்பதெல்லாம் மர்மங்களாகவே இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகொரியா (North Korea) ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். சென்ற மாதம் உணவு பற்றாக்குறையை போக்க அனைவரும் தஞக்ள் செல்ல பிராணிகளை இறைச்சி கூடங்களுக்கு வழங்க வேண்டும் என குலை நடுங்க வைக்கும் உத்தரவை போட்டார். 


 சில மாதங்களுக்கு முன்னர், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) இறந்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், பின்னர், தனது தாத்தா நினைவேந்தலில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


 ஆனாலும் அவர் தொடர்பான மர்மங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன.


அவரது தங்கையான கிம் யோ ஜாங்கிற்கு (Kim Yo-jong) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவர்  பொறுப்பெடுத்துக் கொள்வார் என்ற செய்திகளும் வந்தன.


தற்போது, மற்றோரு விநோதமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இலக்கு பள்ளிக் குழந்தைகள். அதுவும்  தொடக்க பள்ளிக் குழந்தைகள்.


தற்போது தொடக்க பள்ளியில் தினமும், பள்ளிக் குழந்தைகளுக்கு 90 நிமிடங்கள், அதாவது 1 1/2 மணி நேரம் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் பிற அதிபர்கள் குறித்த வரலாறை கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும் என, கிம் ஜாங் உன்னின் தங்கை Kim Yo-jong பிறப்பித்துள்ளார் என சியோலை மையமாக கொண்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


”மகத்துவ கல்வி ” அதாவது கிரேட்னெஸ் எஜுகேஷன்  என்பது நாட்டின் குழந்தைகளின் மனதில், வட கொரியாவின் சர்வாதிகார தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஐந்து மற்றும் ஆறு வயதுடைய பாலர் பாடசாலைகளில்,  கிம் இல்-சங் Kim Il-sung மற்றும் கிம் ஜாங்-இல் ஆ(Kim Jong-il) மற்றும் கிம் ஜாங் உன் (Kim Jong-un) ஆகியோரின் குழந்தைப் பருவங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் செலவிட வேண்டும்.


பள்ளிகளில் குழந்தைகளுக்கான பள்ளி நேரம் 9 மணி முதல் 12 மணி வரை என்ற நிலையில், அதாவது மொத்தம் 3மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் சர்வாதிகாரிகளை பற்றி அறிந்து கொள்ள செலவழித்தால், பாடங்களை எப்பொழுது கற்பிப்பது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  பெற்றோர்கலும் இதனால் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


ALSO READ | சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு