வட கொரியாவில், அதன் ஆட்சியாளர் விதிக்கும் உத்தரவுகள் கொடூரமானவையாகவும் வினோதமாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்நாட்டில், சிறிது நாட்களுக்கு முன், கொரோனா விதிமுறைகளை மீறிய ஒருவருக்கு தண்டனையாக, ஒருவர் நடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 


வட கொரியாவில் (North Korea), மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் சர்வாதிகாரம் செய்து வருகிறது. வட கொரியாவில், நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அரச குடும்பத்திற்கு பயப்படுகிறார்கள்.  இந்த அச்சத்தைக் வெளிகாட்ட ஒரு பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு, ஆட்சியாளர் யாரேனும் இறந்தால், மக்கள் கதறி அழுது மரியாதை செய்ய வேண்டும். யாராவது அவ்வாறு செய்ய தவறினால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்


கிம் ஜாங் உன்னிற்கு (Kim Jong Un) முன்பே, கிம் குடும்பம் நாட்டின் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. கிம் ஜான் உன்  தாத்தாவுக்குப் பிறகு, அவரது  தந்தை கிம் ஜாங் இல் ஆட்சியைப் பிடித்தார். அவர் இறந்த பிறகு, இரங்கல் கூட்டத்தில் பகிரங்கமாக அழுமாறு மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக என்று கூறப்படுகிறது. மக்கள்  அனைவரும் வந்து கதறி அழுதார்கள். சரியாக அழ முடியாதவர் மறுநாள் காணாமல் போனார். அப்போது ஊடகங்களில் இது குறித்து நிறைய விவாதம் நடந்தது.


ALSO READ | கொரோனா விதியை மீறினா கொன்று விடுவேன்.. கண்டதும் சுட கிம் ஜாங் உன் உத்தரவு...!


வட கொரியாவின் இரண்டாவது மூத்த தலைவர் கிம் ஜாங் இல்  மரணம் குறித்து நாட்டு மக்கள் 2011 டிசம்பர் 17 அன்று தொலைக்காட்சி மூலம் அறிந்து கொண்டனர். மரணம் அறிவிக்கப்பட்ட பின்னர், அதிகாரபூர்வமாக துக்கம் அனுசரிக்கப்பட்டு, நாட்டில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.  நாட்டில் கொண்டாட்டம் அல்லது பொழுதுபோக்குக்கும் தடை விதிக்கப்பட்டது. இதுவரை  எல்லாம் சரிதான். ஆனால் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் இந்த 10 நாட்களில், மக்கள்  கதறி அழுது தங்கள் இரங்கலை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


மக்கள் கதறி அழும் வீடியோக்கள் பல வெளிவந்தன. மக்கள் தங்களை ஆட்சி செய்பவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க கதறி அழ வேண்டும்.  சரியாக அழவில்லை  என்றல் அவர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என கூறப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.


அழாத மக்கள் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், பல ர்காணாமல் போயினர். 


மறுபுறம், 10 நாட்களுக்குப் பிறகு, கிம் ஜாங் உன் தொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஊடகங்கள் புதிய தலைவரைப் புகழ்ந்து பேசின. 


ALSO READ | உற்ற நண்பன் சீனா உதவியுடன் கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR