உற்ற நண்பன் சீனா உதவியுடன் கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா..!!!

கிம் ஜாங் உன் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசியை சீனா ரகசியமாக சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2020, 02:55 PM IST
  • கிம் ஜாங் உன் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசியை சீனா ரகசியமாக சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • நாட்டின் பெரும் மக்கள் வறுமை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
  • வட கொரியா பல பொருளாதார தடைகளையும் எதிர்கொள்கிறது.
உற்ற நண்பன் சீனா உதவியுடன் கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா..!!! title=

வட கொரிய அதிபர் மற்றும் சர்வாதிகாரியான கிம் ஜாங்-உன் கோவிட் -19 தடுப்பூசியை ரகசியமாகப் பெற்றுக் கொண்டார் என ஜப்பான் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் (Kim Jong Un) மற்றும் வட கொரியாவின் பல உயர் அதிகாரிகள் மற்றும் கிம்மின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

சீனா ரகசியமாக, கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine)   வட கொரியாவுக்கு வழங்கியுள்ளது என்றும் உளவு துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குள், கிம் ஜாங் மற்றும் பிறருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்னதாக, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தரவுகளை ஹேக் செய்ததன் பின்னணியில், வட கொரியா  இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியது.
நாட்டின் பெரும் மக்கள் வறுமை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

ALSO READ | சீனப்பெருஞ்சுவர் குறித்த மர்மங்களும் சுவாரஸ்யங்களும்..!!!

கொரோனா (Corona) வட கொரியாவில் பேரழிவை ஏற்படுத்துகிறது.  நாட்டில் அதிகாரப்பூர்வமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. வட கொரியாவின் பெரும் மக்கள் ஏற்கனவே வறுமையை எதிர்கொண்டுள்ளனர், கொரோனாவுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

வட கொரியா பல பொருளாதார தடைகளையும் எதிர்கொள்கிறது. ஜனவரியில், வட கொரியா (North Korea) தனது எல்லைகளை மூடியது. கடந்த மாதம் வெளியான ஒரு அறிக்கை வட கொரியா கொரோனா நோயாளிகளை, ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளக கூறியது.

ALSO READ | பிரம்மபுத்ராவில் அணைகட்ட சீனா திட்டம்... இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News