போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!
North Korea And War Preparation : அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய நிலையில், வட கொரிய ராணுவம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என கிம் ஜாங் உன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாட்டில் ராணுவ தளத்தை பார்வையிட்ட போது, ராணுவத்தை போருக்கு தயாராக இருக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. கிம் தனது பயணத்தின் போது, எந்தவொரு நிகழ்வுக்கும் இராணுவம் முழுமையாக தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்றும், இராணுவம் "தற்போதைய சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தும் ஒரு புதிய உச்சக்கட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங் உன், வட கொரியாவின் எந்த ராணுவ தளத்திற்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடங்கியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், நேற்று (2024 மார்ச் 6, புதன்கிழமை) நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய இராணுவ தளத்திற்குச் சென்றார். அங்கு, போருக்கான தயார்நிலை தொடர்பாக உத்தரவுகளை வழங்கினார் என்று நாட்டின் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!
அமெரிக்கா-தென் கொரியா பயிற்சி
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியால் கடுப்பான கிம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. ஏனென்றால், இந்த ஆண்டு அமெரிக்கா-தென்கொரியா இடையேயான பயிற்சிகளில் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை அடைந்த கிம், எந்தவொரு நிகழ்வுக்கும் இராணுவம் முழுமையாக தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை கிம் வலியுறுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இராணுவம், தற்போதைய சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தும் ஒரு புதிய உச்சக்கட்டத்தை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"நமதுஇராணுவம்,அதன் போர் திறன்களை விரைவாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மையான போர் பயிற்சிகளை சீராக தீவிரப்படுத்த வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தியதாக KCNA மேற்கோள் காட்டிய ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உண்மையான போரை உருவகப்படுத்தும் நிலைமைகளின் கீழ், துருப்புக்களை அவர் ஆய்வு செய்தார். உச்ச வட கொரியத் தலைவர் அமெரிக்கா-தென் கொரியா இடையேயான பயிற்சிகள் தொடர்பாக நேரடியாகக் குறிப்பிட்டாரா என்பது தொடர்பாக KCNA செய்தியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உலகில் பல இடங்களில் மோதல் போக்குகள் அதிகரித்து வரும் நிலையில் கிம் ஜாங் உன்னின் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் என பல்வேறு இடங்களிலும் சண்டை தொடரும் நிலையில், இன்னொரு போர் மூளுமோ என்ற அச்சம் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளன.
ரஷ்ய உக்ரைன் போர் பல்வேறு பொருளாதார சிக்கல்களையும், உணவு தானிய போக்குவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்ற நிலையில் வட கொரியாவின் புதிய அச்சம் வேறுவிதமான அச்சங்களை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | போர்க் கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நாயை விட்டு கடிக்க வைத்த இஸ்ரேல்! UNRWA புகார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ