உலகின் மர்ம பிரதேசம் வட கொரியா தான். அந்த நாட்டில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. கொடூரமான தண்டனைகள், வதை முகாம்கள், மக்களுக்கான கடுமையான சட்டங்கள் எல்லாம் அந்த நாட்டில் அமலில் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து யாரும் எதுவும் கேட்க முடியாது. மீறி கேட்பவர்களின் உயர் அடுத்த நொடி வட கொரிய மண்ணில் இருக்காது. அன்றாட வாழ்க்கையில் கூட பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட அனைவரம் சட்டத்திட்டங்களின்படியே நடக்க வேண்டும். உண்ணும் உணவில் இருந்து அரசின் கண்காணிப்பு இருக்கும். தப்பி தவறிகூட விதிமீறல்கள் ராணுவத்துக்கு தெரிந்தால் உடனடியாக கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்படிக்க | இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!


இதுதான் வடகொரியாவின் இன்றைய நிலை. உலகிலேயே குற்றவாளிகளை தண்டிப்பதில் வடகொரியா தான் இவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது. ஆனால் இங்கு அளிக்கப்படும் தண்டனை முறைகள் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களுக்காக, கிம் ஜாங் உன் கட்டியிருக்கும் இடத்தின் பெயர், 'ஹெல் ஆன் எர்த்' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு தொழிலாளர் வதை முகாம். இங்கு மக்கள் பட்டினி வைக்கப்படுவார்கள். நிறைய சித்திரவதை செய்யப்படுவார்கள். இப்படியான பல தண்டனை முறைகள் இருக்கிறது.


 'ஹெல் ஆன் எர்த்' இடத்தில் சிறை வைக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் யாரும் வட கொரியாவை விட்டு வெளியேறக்கூடாது என்பது தான். அங்கு 9 மாதங்கள் சிறை வைக்கபட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததால் ராணுவத்தில் சிக்கி, வதை முகாமில் அடைக்கப்பட்டதாகவும், அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். பட்டினி போடப்பட்டதில் அந்த நபரின் எடை 35 கிலோவாக குறைந்திருக்கிறது. 


சித்திரவதை குறித்து மேலும் அவர் விவரித்ததில், முகாம்களில் இருப்பவர்கள் செங்குத்து மலைகளில் ஏற வைக்கப்படுவார்களாம். அப்போது மேலே இருந்து மரத்தை வெட்டி வீசுவார்களாம். அந்த மரம் விழும்போது சிலர் உயிரிழப்பார்களாம், சிலர் கடுமையான உடல் காயங்கள் அடைவார்களாம். இறந்த உடல்கள் எல்லாம் அங்கேயே குடல் வெளியேறி கிடக்குமாம் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை  ஸ்டார் செய்தி வெளியிட்டிருக்கிறது. உளவாளிகள் சிக்கிவிட்டால் அவர்களுக்கு பிரத்யேக தண்டனைகள் இருக்கிறதாம். 


தென்கொரியாவைச் சேர்ந்த ஒரு பாதிரியார் கடந்த 24 ஆண்டுகளாக வடகொரியாவில் இருந்து தப்பி வருபவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அவர் குறித்து எடுக்கப்பட்ட பியாண்ட் உட்டோபியா: வடகொரியாவிலிருந்து எஸ்கேப் என்ற ஆவணப்படத்தில் வடகொரியாவில் இருந்து தப்பித்தவர்கள் கூறிய கதைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அந்த பாதிரியார் கூறும்போது, காடு மலைகளுக்கு நடுவே நடந்து சென்று கடுமையான காலநிலைகளுக்கு இடையே வட கொரிய மக்களை அழைத்து வந்து தப்பிக்க வைக்கிறோம், இது ஒரு சட்டவிரோத காட்டு வழி பயணம் தான் என கூறியுள்ளார். வட கொரியா குறித்த இந்த கதைகள் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகுகிறது. 


மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ