வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் நிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று வெளியான ஒரு ஊடக அறிக்கை, அமெரிக்காவிற்கு உளவுத்துறை உள்ளீடுகள் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகக் காட்டியது.
 
வட கொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் கடந்த சில நாட்களாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். ஊடக அறிக்கையின்படி, இந்த பிரச்சனைக்காக கிம் ஜாங்கின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அதன் பிறகு, அவரது நிலை தற்போது மோசமடைந்து என தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் வட கொரோயா இந்த தகவலை மறுத்துள்ளது.


தகவல்கள் படி, வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் தலைநகர் பியோங்யாங்கிற்கு வெளியே ஹியாங்சனில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. முன்னதாக நாட்டின் அடித்தள நாள் மற்றும் அவரது தாத்தாவின் 108-வது பிறந்தநாள் நிகழ்சிகளில் கிம் ஜாங் பங்கேற்காதபோது இதுதொடர்பான யூகங்கள் தீவிரமடைந்தன. கிம்மின் தாத்தாவின் பிறந்த நாள் ஏப்ரல் 15 அன்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உள்ளூர் தகவல்கள் படி, சர்வாதிகாரி கிம் ஜாங்கின் உடல்நிலை கடந்த சில மாதங்களாக நோய்வாய் பட்டு இருந்தது. இதற்கான காரணம் புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலை என கூறப்படுகிறது. கிம் ஜாங் உன் கடைசியாக ஏப்ரல் 11 அன்று பொது நிகழ்வுகளில் காணப்பட்டார். அதன்போது அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, கொரோனா வைரஸ் குறித்து கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் இது தொடர்ந்து, ஏப்ரல் 14 அன்று ஏவுகணை சோதனை திட்டத்தில் கூட அவர் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.