இரண்டு நாள் பயணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வட கொரிய தலைவர் கிம்-ன் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும். 



இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில்... "அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது" என குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில், சிங்கப்பூர் சென்றுள்ள கிம்-மின் புகைப்படத்தை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



இந்த சந்திப்பிற்கு பின்னர் வட கொரிய தலைவர் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னதாக இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.