வட கொரிய அதிபர் கிம், ரஷ்யாவிற்கு வருகை தரவிருக்கும் தகவலை ரஷ்ய அதிபர் உறுதி செய்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாற்று சந்த்பானது வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது. 


ரஷ்யாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய நாடாளுமன்ற சபாநாயகர் கிம் யாங் நம், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசினார். அப்போது, ரஷ்யாவிற்கு வருகை தரவுள்ளது குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எழுதிய கடிதம் புட்டினிடம் ஒப்படைக்கப்பட்டது. 


இதைப் படித்து பார்த்ததன் பிறகு பேசிய புட்டின், கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த பதற்றம் மறைந்து அமைதி திரும்பியிருப்பதாகவும், இதற்கு சிங்கப்பூர் சந்திப்பு மட்டுமே காரணம் என்றும் கூறினார். மேலும், கிம் ரஷ்யாவிற்கு வருவதை தாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டதன் பிறகு கிம்முடனான சந்திப்பு நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.