வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் -க்கு மரியாதை நிமித்தமாக இரண்டு வெள்ளை கொரிய புங்கஷன் நாய்குட்டிகளை பரிசளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட கொரியாவிற்கும் - தென் கொரியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள நட்புணர்வின் அடையாளமாக இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த மாதம் பிற்பகுதியில் வட கொரிய தலைநகர், தென் கொரிய தலைவர் இருவரும் மூன்றாவது முறையா வரலாற்று சந்திப்பினை நிகழ்த்தினர். வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. இச்சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இரநாடுகளுக்கும் இடையே தற்போது சுமுகமான நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் வேலையில் கிம் தனது பரிசினை அளித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.


வட கொரிய தலைவர் தென் கொரிய தலைவருக்கு ஒரு ஜோடி புங்கஷன் நாய்குட்டிகளை அனுப்பும் நிகழ்வு இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டு தற்போதைய வடகொரிய தலைவர் கிம் ஜாங் தந்தை கிம் ஜாங் II, அப்போதைய தென் கொரிய தலைவரான கிம் டே-ஜங்-கிற்கு இரண்டு புங்கஷன் நாய்க்குட்டிகளை பரிசாக அனுப்பி வைத்தார். முதல் சர்வதேச கொரிய உச்சிமாநாட்டில் இருதலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது!