வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. பியாங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல முக்கிய பொருளாதார ஒப்பந்தகள் நடைபெற்றன. இது இரு நாடுகளுக்கிடையே மேலும் உறவை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்காலிகமாக தடைப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் வட கொரியா பேச்சுவாரத்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.