இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வசித்து வந்த பார்பி கார்டன் என்ற பெண் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆன்லைன் மூலம் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருட்களுக்கான பணத்தை கிரடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருட்கள் வீட்டுக்கு வந்தவுடன், அனைத்தின் விலையையும் சரி பார்த்துள்ளார். அதை தொடர்ந்து, அவர் வாங்கிய ஒரு பொருளான வாழைப்பழத்தின் விலையையும் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பழத்தின் விலையானது இந்திய மதிப்பில் ஆமார் 86 ஆயிரம் ரூபாய் (£930.11).


இதனையடுத்து இதுகுறித்து பெண் தனது கிரடிட் கார்டில் மோசடி நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில், மார்க்கெட்டை தொடர்பு கொண்டபோது, கணனியில் ஏற்பட்ட கோளாறு என்றும் வாழைப்பழத்திற்கான உரிய விலை மட்டுமே எடுத்துள்ளோம் என விளக்கம் தந்துள்ளது.



இந்த தவறினை எங்களுக்கு சுட்டிகாட்டியதற்கு நன்றி என தெரிவித்துள்ளனர். இனிமேல், இப்படி ஒரு தவறு நடக்காது என சூப்பர்மார்க்கெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது பிரச்னை முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அந்த பெண் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ளார்.