புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, அர்மீனியா, துருக்கி என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஹெபடைடிஸ் சி (Hepatitis C) வைரஸை கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் 

  • விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசு திங்களன்று வழங்கப்பட்டது. 

  • "இரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸுக்கு எதிரான போராட்டத்தில் மூன்று விஞ்ஞானிகள் தீர்க்கமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்" என்று நோபல் கமிட்டி புகழாரம்.  

  • ஆர்மீனியாவுடனான நாகோர்னோ-கராபாக் (Nagorno-Karabakh) மோதல்களுக்கு மத்தியில் பதற்றங்களை தணிக்க வேண்டும் என்று அஜர்பைஜானின் நட்பு நாடான துருக்கிக்கு NATO வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடுமையான மோதலுக்கு மத்தியில், Ganja, Terter, Beylagan, Barda உள்ளிட்ட பல நகரங்கள் மீது ஆர்மீனிய படைகள் ஷெல் வீசி தாக்குதல் நடத்திசியதாக அஜர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • 'உச்சகட்ட' COVID-19 எச்சரிக்கையில் பிரான்சு நாட்டின் தலைநகர் வந்துள்ளதால் பாரிஸில் உள்ள பார்கள், கஃபேக்கள் மூடப்படுகின்றன.

  • பாரிஸ், முக்கியமான மூன்று பட்டியலையும் தாண்டி, கொரோனா பரவல் தொடர்பாக, உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை என வகைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய முக்கியச் செய்தி | LAC முதல் LOC வரை அதிரடி நடவடிக்கைக்கு  ராணுவம் தயார்! அறைகூவல் விடும் இந்தியா…  


  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவது குறித்து மருத்துவர்கள் இன்று முடிவு செய்வார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு தான் திரும்புவது உறுதி என்று அதிகாலையிலேயே டிவிட்டரில் செய்தி வெளியிட்டு டிரம்ப் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  

  • 3,500 ஹோண்டுரான்(Honduran) குடியேறிகளை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புகிறது குவாத்தமாலா (Guatemala). வியாழக்கிழமையன்று, கிழக்கு குவாத்தமாலாவின் எல்லைப் பகுதியில் உள்ள Corinto என்ற இடத்தில் ராணுவ பாதுகாப்பு தடையை உடைத்து ஒரு வாகனம் நாட்டிற்குள் நுழைந்ததை அடுத்து மெக்ஸிகோ தனது எல்லைப் பகுதியை மூடியது குறிப்பிடத்தக்கது.  

  • சரக்கு விண்கலம் எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா ஐ.எஸ்.எஸ் சென்றடைந்தது. விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் கல்பனா சாவ்லாவின் முக்கிய விண்வெளிப் பயணப் பங்களிப்புகளுக்காக அவரது பெயர் சரக்கு விண்கலத்திற்கு சூட்டப்பட்டது.

  • அதிபர் மருத்துவமனையில் இருந்தால், நாடே இருளில் மூழ்கிவிடுமா? கொரோனா வைரஸின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் பலரின் மனதில் இந்த கேள்வியை எழுப்புகிறது.  

  • யூத மாணவரின் 'கொலை முயற்சி' குறித்து ஜெர்மன் போலீசார் விசாரணை. ஞாயிற்றுக்கிழமையன்று, தேவாலயம் ஒன்றின் முன்பு சென்றுக் கொண்டிருந்த 26 வயதான யூத இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. தலையில் பலமுறை தாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.

  • COVID-19 பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வான் டெர் லேயன் (von der Leyen) 'சுய தனிமைப்படுத்துதல்' செய்துக் கொண்டுள்ளார்.

  • கடந்த வாரம் செவ்வாயன்று von der Leyen கலந்துக் கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததால், சுய தனிமைப்படுத்தல் செய்துக் கொள்வதாக வான் டெர் லேயன் தெரிவித்தார்.

  • உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தும் விதத்தால், லண்டனில் உள்ள சீனாவின் புதிய தூதரகம் அமையவிருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் சீற்றம். சீனாவில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படுவதை தடுக்கும் வரை, சீனாவின் தூதரகம் இங்கே அமைவதை யாரும் வரவேற்கவில்லை என்று அங்கு கூடிய சிலர் தெரிவித்துள்ளனர்.


Read Also | Nobel Prize 2020: ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR