`நானும் ரவுடிதான்` பேஸ்புகில் கமெண்ட்... வாண்டடாக வம்பிழுத்தவரை கொக்கிப்போட்டு போலீஸ்!
`தேடப்படும் குற்றவாளிகள்` பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என போலீசாரின் பேஸ்புக்கில் கமெண்ட் செய்தவரிடம், `நீ அங்கேய இரு, வந்துட்டுருக்கோம்` என்ற பாணியில் போலீசார் பதிலளித்த கமெண்ட் பலரையும் ஈர்த்துள்ளது.
நாம் பார்க்கும் வேலைக்கான தகுந்த அங்கீகாரம் உரிய நேரத்தில், உரிய இடங்களில் சரியாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். மேலும், பொதுவாக கிடைக்க வேண்டிய மரியாதையிலும், முக்கியத்துவத்திலும் கூட எந்தவித சமரசத்தையும் ஏற்காத மனப்பான்மையையே எல்லோரும் வைத்துள்ளனர்.
உதாரணத்திற்கு, முன்பெல்லாம் கல்யாண பத்திரிகைகளில் தனது பெயர் இல்லை என்று ஆரம்பித்த பிரச்னைகள், தற்போது வாட்ஸ்அப்பில் தனது பிறந்தநாளுக்கு ஸ்டேட்டஸ் போடவில்லை என்ற ரகத்திற்கு வந்துவிட்டது. இதுமட்டுமில்லாமல், ஒரு முக்கியமான நபர், ஒரு முக்கியமான இடத்தில் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டால் அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதை நீங்களும் கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.
அதுபோன்றுதான், அமெரிக்காவின் ஜார்ஜியாவில் காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவிட்ட 'மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்' என்ற பட்டியலில் தனது பெயர் இல்லை என்று ஒரு குற்றவாளி கமெண்ட் செய்ததால், அவருக்கு ஏற்பட்ட விளைவு இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!
அதாவது, ராக்டேல் கவுண்ட் செரிஃப் அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில், மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலை அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில், கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்பவர்,"இதில் நான் எங்கே" என்று தொனியில் பதிவிட்டிருந்தார்.