புது டெல்லி: கொரோனா வைரஸ் மூலம் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், ஈரானில் பல பாதிப்பு மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வைரஸ் காரணமாக 54,000 கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட பின்னர், தற்போது மசூதிகளில் நமாஸ் படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாருடனும் கைகுலுக்க வேண்டாம் என்று அங்குள்ள அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உலகளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 98,123 ஐ எட்டியுள்ளது என்று முந்தைய நாளில் தெரிவிக்கப்பட்டது. உலகின் 87 நாடுகளில், கொரோனா தொற்றுநோய் வைரஸ் பாதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் அதிகரித்துள்ளன. இறப்பு எண்ணிக்கை 3,385 ஐ எட்டியுள்ளது. 


ஹாங்காங் மற்றும் மக்காவைத் தவிர, சீனாவில் 80,552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருகிறது. இதில் 3,042 பேர் இறந்தனர். சீனாவிற்கு வெளியே மொத்தம் 17,571 பேருக்கும் வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 343 பேர் இறந்துள்ளனர். 


சீனாவிற்குப் பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தென் கொரியா (6,284 பேர், 42 இறப்புகள்), இத்தாலி (3,858 பேர், 148 இறப்புகள்), ஈரான் (3,513 பேர், 107 இறப்புகள்) மற்றும் பிரான்ஸ் (423 பேர், ஏழு இறப்புகள்).


ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 124 பேர் இறந்துள்ளதாகவும், 4,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.


சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானாஸ் ஜஹான்போர் தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் இந்த புள்ளிவிவரங்களை வழங்கினார். ஈரான் உள்ள மொத்தம் 31 மாகாணங்களிலும் கொரோனோ வைரஸ் இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டதாக நம்பப்பட்டாலும், அதுக்குறித்து அவர் எந்த கூடுதல் விவரங்களையும் வழங்கவில்லை.


ஈரானின் பல முக்கிய நகரங்களில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையையும் ரத்து செய்யப்பட்டது. பிராந்தியத்தில் உள்ள மற்ற இடங்களைப் பற்றி பேசுகையில், கர்பலாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை ஈராக் ரத்து செய்தது. வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரார்த்தனையை அதிகாரிகள் குறைத்தனர். அது 10 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. 


மக்கா போன்ற ஒரு புனித இடத்தில் கூட, கொரோனா காரணமாக பதற்றம் நிறைந்த சூழ்நிலை உள்ளது. இங்குள்ள அரசாங்கம் வருகை தரும் ஜரைனை உன்னிப்பாக கவனித்து வருகிறது. 


மேற்கு ஆசியாவில் 4,990 க்கும் மேற்பட்டோருக்கு COVID-19 வைரஸ் நோய்க்கு வழிவகுத்தன. சீனாவுக்குப் பிறகு, ஈரான் மற்றும் இத்தாலி ஆகியவை இந்த நோயால் அதிக இறப்பை சந்தித்துள்ளன.