இரண்டு தீவிரவாத அமைப்புகளை தடை விதித்தது பாகிஸ்தான்
இரண்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இஸ்லமபாத்: இரண்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தலீபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
தெஹ்ரீக் - இ- தாலிபான், பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உல்-அஹ்ரார், மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி அல்-அலாமி ஆகிய இரு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற தாக்குதலையடுத்து இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.