ஒரு கொடிக்கு ரூ. 40 கோடியா... ஏற்கெனவே கடன் பிரச்னை - பந்தா காட்டுகிறதா பாகிஸ்தான்!
பாகிஸ்தான் இந்தியாவோடு போட்டிப்போடும் வகையில் அதன் சுதந்திர தினத்தன்று (ஆக. 14) 500 அடி தேசியக் கொடியை ஏற்றிவைக்க திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமான விழாக்களுக்காக உலகம் முழுவதும் இந்தியாவை திரும்பி பார்க்கும் எனலாம். இருப்பினும், அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது அதன் முடங்கும் கடனைப் பொருட்படுத்தாமல், அதன் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடம்பர கொண்டாட்டத்திற்கு திட்டம்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவை போன்றே பாகிஸ்தானும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட சில ஆடம்பரமான திட்டங்களைக் கொண்டுள்ளது.
40 கோடி ரூபாய்
அதன் கொண்டாட்டங்கள் மூலம் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிக்கும் பாகிஸ்தான், சுதந்திர தினத்தன்று 500 அடி தேசியக் கொடியை ஏற்றிவைக்க முடிவு செய்துள்ளது, அதன் மதிப்பு பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.40 கோடி. இந்த கொடி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று லிபர்ட்டி சவுக்கில் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வாக்னர் குழுவின் பிரச்சனை முடிந்தாலும் முடியாத பாதிப்பு! ஆட்டம்கண்ட பொருளாதாரம்?
அனைத்தும் அரசு பணம்
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தற்போது 2000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தங்களது தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அரசுப் பணத்தை ரூ.40 கோடி அளவில் செலவிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடிப் போர்
அட்டாரி எல்லையில் 413 அடி உயர கொடியை ஏற்ற இந்தியா திட்டமிட்டதை அடுத்து, பாகிஸ்தானில் 500 அடி கொடியை ஏற்ற இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இரு போட்டி நாடுகளுக்கும் இடையே 'கொடிப் போர்' வெடிப்பது இது முதல் முறையல்ல.
முதல் முறையல்ல...
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திர தினக் கொடிகள் மீது பல ஆண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது. 2017ஆம் ஆண்டில், அட்டாரி-வாகா எல்லையில் இந்திய அரசாங்கம் 360 அடி மூவர்ணக் கொடியை நிறுவிய உடனேயே 400 அடி கொடியை நிறுவ பாகிஸ்தான் முடிவு செய்தது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐஎம்எஃப் ஆகியவை நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வழங்கியதை அடுத்து, நாடு இப்போது அதிக கடனைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | பள்ளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியருக்கு தூக்கு... அதை ஏன் செய்தார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ