நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் குழு பாகிஸ்தானை தடுப்பு பட்டியலில் வைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் பிரிவு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் கூட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதில் நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுப்பது தொடர்பான 40 காரணிகளில் 32-ல் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை கட்டுபடுத்தவதும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளளது. இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) கிரே பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே வரும் அக்டோபர் மாதம் வரை இந்த நடவடிக்கை எடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 


மேலும் அக்டோபர் மாதம் வரையிலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கா பட்சத்தில் இந்த அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. 


இச்சூழலில் தற்போது ஆசியா-பசிபிக் குழுவின் தடுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்ஹார் அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாத நிதிகளை நிறுத்துவதில் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யத் தவறும் நாடுகளின் தடுப்புப்பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்குமாறு இந்தியா கடந்த காலங்களில் FATF-ஐ வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.