பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதோடு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. கோதுமை மாவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் கடைசியாக சிக்கனும் சேர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு கிலோ சிக்கன் விலை 700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு மத்தியில், மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா, சிக்கன் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல எனக் கூறி மக்கள் அதனை  சாப்பிடுவதைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவரது கருத்து பாகிஸ்தான் கோழிப்பண்ணை சங்கத்தை எரிச்சலடையச் செய்தது. சிக்கன் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு மாதத்தில் சிக்கன் விலை கிலோவுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது.  சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சிக்கன் விலை ரூ.440-480 ஆக இருந்தது, இப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.650-700 ஆக உள்ளது. பாகிஸ்தான் கோழிப்பண்ணை தொழிலுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இந்த நெருக்கடிக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றனர். 


கோழிப்பண்ணை வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் கூறுகையில், கோழிகளுக்கு தீவனம் சரியாக வழங்க முடியாத அளவிற்கு தீவனங்கள் விலை அதிகரித்துள்ளது என்றும், சந்தையில் கோழிகளின் வரத்து பெரிதும் குறைந்து விட்டது எனவும் கூறினர். அதே நேரத்தில் தேவை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், 1500 முதல் 1800 ரூபாய் வரை கிடைத்த, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை கோழி தானியம், தற்போது, 4,000 ரூபாய் வரை விலை போகிறது. அதோடு, போக்குவரத்து செலவும் அதிகரித்து, விலை உயர்வுக்கு வழிவகுத்தது.


மேலும் படிக்க | மெக்கா மெதினா இடையிலான புல்லெட் ரயிலை ஓட்டி வரலாறு படைக்கும் பெண்கள்!


வெளிநாடுகளில் இருந்து வரும் கோழித் தீவனங்களை சுங்கத்துறையில் இருந்து பெற, போதுமான அளவு டாலர்கள் இல்லாததால், கோழித் தீவன சரக்குகள் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாகவும் சிலர் கூறினர். இதுவும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.


மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ