அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த, அரசுக்கு வந்த பரிசு பொருட்களில் முறைகேடு செய்த வழக்கில் நவாஸ் ஷரீஃப் மீது  குற்றம் சாட்டப்பட்டது.  இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளாமல் அவர் பிரிட்டன் சென்றார். அதை அடுத்து, 2020 செப்டம்பரில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்பை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவாஸ் ஷெரீப் (Nawaz Shariff) நாட்டை விட்டு வெளியேறியபோது, ​​பாகிஸ்தானின் தேசிய நிர்வாக அமைப்பு, அவரது சொத்துக்களை ஏலம் எடுக்க நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது, மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பின் அனைத்து சொத்துக்களையும் விற்று, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம், கருவூலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.


ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு


நீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில் கொண்டு, வருவாய் துறை, லாகூரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஷெரீப்பிற்கு சொந்தமான சுமார் 11 ஏக்கர் நிலம் ரூ .11.2 கோடிக்கு  ஏலம் விடப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.


நவாஸ் ஷெரீப்பிற்கு சொந்தமான நிலத்திற்கு உரிமை கோரிய சுமார் ஆறு பேர், ஏலத்தை நிறுத்துமாறு வருவாய் அதிகாரிகளை கோரினர். ஆனால், அரசு ஏல நடவடிக்கையை நிறுத்த மறுத்து விட்டது.


நிலத்திற்கு உரிமை கோரியவர்களில் ஒருவரான, அஷ்ரப் மாலிக், இந்த நிலத்தை நவாஸ் ஷெரீப்பிடமிருந்து 2019 மே 29 அன்று 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறினார். நவாஸ் ஷரீஃப் லண்டனுக்கு போகும் முன், வங்கிகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டு, நிலத்தை தான் வாங்கியதாக அவர் வாதாடினர். ஆனால், வாங்கிய பின் அவர் உடனேயே லண்டன் சென்று விட்டதால், நிலத்தை பதிவு செய்ய முடியவில்லை. இந்த நிலம் தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று அஷ்ரப் மாலிக் தெரிவித்தார்.


ஏலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு செவிசாயக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நவாஸ் ஷெரீப்பின் பிற சொத்துக்களையும் அரசாங்கம் ஏலம் விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ALSO READ | ஹமாஸ் ஏவிய ராக்கெடுக்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாத்த Iron Dome


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR