பாகிஸ்தானில் பிரெஞ்சு மக்களுக்கு எதிரான வன்முறை போராட்டம் தீவிரமடைந்து, அங்கே உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தெஹ்ரீக் இ லப்பைக் (Tehreek-e-Labaik Pakistan) என்ற கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீதியில் இறங்கி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலமாகவே, பாகிஸ்தானில், வன்முறை போரட்டங்கள் தீவிரமடைந்து, நாடே பற்றி எறிகிறது.
தனது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் (Pakistan) வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானில், இந்த வன்முறை போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதை அடுத்து, அங்கே, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தற்காலிகமாக முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்
பிரான்ஸில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 அன்று, நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், ஒருவர், பட்டபகலில், நடுத்தெருவில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இது பிரான்ஸில் (France) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அதிரடி நடவடிக்கையாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (French President Emmanuel Macron) முகம்மது நபியின் சர்ச்சைக்குரிய கார்டூனை, அரசின் கட்டிடங்களில் பிரம்மாண்டமாக திரையிட்டார். அதோடு நிற்காமல், மதரஸாக்கள் உள்ளிட்ட பல பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை விதித்து பிரான்ஸில் சட்டமும் இயற்றப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கு, ஒரு பத்திரிக்கைக்கு மீண்டும் ஒப்புதல் அளித்தது தான், பாகிஸ்தானின் இன்றைய வன்முறைக்கு காரணம்.
இது கடவுள் நிந்தனை என பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ லப்பைக் (Tehreek-e-Labaik Pakistan) அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீதியில் இறங்கி, பாகிஸ்தானில் நாடு முழுவதும் வன்முறை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ALSO READ | Shocking Attack: பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் மீது தாக்குதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR