பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். திங்களன்று, ஆற்றிய உரையில் ஆப்கானிஸ்தானில் இந்தியா "பெரிய தோல்வியை" சந்தித்ததாக கூறிய உள்துறை அமைச்சர் ரஷித், இந்தியாவின் உளவுத்துறை நிறுவனமான RAW (RAW-Research and Analysis Wing) இப்போது பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க உள்ளூர் குண்டர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து குறிப்பிட்ட  ஷேக் ரஷீத், பாகிஸ்தானுக்கு எதிரான நிலையில் உள்ள TTP-க்கும் பாகிஸ்தான ரசுக்கும் இடையில் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா, ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் பாகிஸ்தானிற்கு நல்லுறவு ஏற்படுவதை விரும்பவில்லை என்றார். அதனால்,  இந்திய உளவு அமைப்பான RAW  பாகிஸ்தானில் கலவரத்தை தூண்டி வருவதாக ஷேக் ரஷித் குற்றம் சாட்டினார்.


ALSO READ | தேர்தல் ‘இலவச’ வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல்  ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


உள்ளூர் குற்றவாளிகளை தூண்டி விடும் இந்திய உளவு அமைப்பின் சதியால், பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ரஷித் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு லாகூரில் உள்ள ஜௌஹர் டவுன் குண்டுவெடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்றார். 


 ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்று கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தானில் RAW மற்றும் NDS தோற்கடிக்கப்பட்டதாக அவர் கூறினார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக போரிட்ட சுமார் 42 சர்வதேச படைகளை தோற்கடித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையான டுராண்ட் லைனில் பாகிஸ்தான் ராணுவம் அமைத்த  வேலி குறித்து கூறிய ரஷித், ஆப்கானிஸ்தான் எல்லையில் இன்னும் 21 கி.மீ தூரத்துக்கு  மட்டுமே வேலி அமைக்கும் பணிநடைபெற உள்ளது என்றார். தலிபான்களால் வேலியை உடைத்தது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சிறிய பகுதியில் நடந்த சம்பவம் மட்டுமே. பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு வேலி அமைக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


ALSO READ | நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் தீருமா; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தைவான்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR