புதுடில்லி: காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கிய பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறலை நடந்து வருவதாக் கூறிவருகிறது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) பாகிஸ்தானுக்காக வாதிடும் வழக்கறிஞர், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தானிடம் எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் பாகிஸ்தான் சில மோசமான செயல்களை இந்தியாவுக்கு எதிராக அரங்கேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒருபக்கம் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க வில்லை. மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால் அங்கும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனகூறி பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கமறுத்தது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. 


இந்தநிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் காஷ்மீர் தொடர்பாக பேசிய அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறலை நடந்து வருவதாக கூறும் பாகிஸ்தானிடம் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இல்லை என்று தெளிவாகக் கூறினார். இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினம் எனக் கூறினார்.