பாகிஸ்தானின் (Pakistan) பஞ்சாப் மாகாணத்தில் சாதிகாபாத் மாவட்டத்தில் உள்ள கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் அறிக்கை வந்துள்ளது. அவர் இந்த சம்பவத்தை கண்டித்த அவர், தனது அரசு கோவிலை சீரமைக்கும் என்று கூறினார். புதன்கிழமை மாலை போங் ஷெரீப் கிராமத்தின் சித்தி விநாயகர் கோவிலுக்குள் ஒரு கும்பல் நுழைந்து, நாசகார வேலையில் ஈடுபட்டசம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், விநாயகர் கோவில் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இம்ரான் கான் (Imran Khan) ட்வீட் செய்துள்ளார். சம்பவத்துடன் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என நான் ஏற்கனவே பஞ்சாப் காவல் துறை ஆணையரிடம் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் காவல்துறையின் அலட்சியமும் முன்னுக்கு வந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் ட்வீட் செய்துள்ளார்.



பாகிஸ்தானில், இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்து கடும் ஆட்சேபனைகளை எழுப்பியது.


ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு


 


முன்னதாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில், தானே கவனத்தில் எடுத்துக் கொண்டு, பஞ்சாப் மாகாணத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.


முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கும்பல் ஒரு இந்து கோவிலுக்கு தீவைத்து தீ வைத்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள தெரி கிராமத்தில் உள்ளூர் மதகுருமார்கள் தலைமையிலான கும்பல், கோவிலை இடித்தது. இந்த வழக்கில், தீவிர ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் ரஹ்மத் சலாம் கட்டக் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.


In Pics: உலகின் மிக மர்ம கிராமமான ‘இறந்தவர்களின் நகரம்’


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR