ஸ்ரீநகர்: இந்தியாவுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஈடுபட்டு உள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாழும் மக்களிடம் துப்பாக்கிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லைகோடு நோக்கி செல்லுங்கள் என காஷ்மீர் 'ஒற்றுமை' பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் "காஷ்மீர் ஒற்றுமை" என்ற பேரணி நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், மோடி அரசாங்கத்தையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்


அவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரம் என்பது மனிதாபிமானம் அடிப்படைக் கொண்டது. நான் மோடிக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தியற்ற நபர் மட்டுமே இதுபோன்று செயல்களை செய்வார்கள். 40 நாட்களாக காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதை மனிதநேயம் இருப்பவர்களால் ஒருபோதும் செய்ய முடியாது.


பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்பது முற்றிலும் தவறு என்று அவர் கூறினார். மோடி அவர்களே நீங்கள் செய்யும் செயலால் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் என்ற உறுதிமொழியை உங்களுக்கு தருகிறேன். நீங்கள் காஷ்மீர் மக்களை ஏமாற்ற முடியாது. நரேந்திர மோடி சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது முஸ்லிம்கள் மீது அதிக வெறுப்பைக் கொண்ட ஒரு குழு எனக்கடுமையாக தாக்கி பேசினார். 


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் இம்ரான் கான் தனது மூன்றாவது சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.