பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் 100 மணி நேர உரையாடல்கள் அடங்கிய ஆடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோக்கள் டார்க் வெப்பில் 3.5 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.28 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏஜென்சிகள் "மிக முக்கியமான" விஷயத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டதாகவும் பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறியுள்ளார். அரசாங்க அதிகாரிகளின் கசிந்த ஆடியோ கிளிப்புகள் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய அவர், "அணு ஆயுதம்  வைத்திருக்கும் நாட்டின் பிரதமரின் அலுவலகம் கூட பாதுகாப்பாக இல்லை" என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமருக்கும் அரசு அதிகாரிக்கும் இடையேயான உரையாடல் இடம்பெறும் கசிந்த ஆடியோ கிளிப்களில் ஒன்று குறித்து கருத்து தெரிவித்த ஃபவாத்,  அரசின் நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் லண்டனில் எடுக்கப்படுவதை, ஆடியோ கசிவுகள் உறுதிபடுத்தியுள்ளன என்றார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, ஆளும் கட்சி மீது  தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர், தனது டிவிட்ட்டர் பதிவில் வெளியிட்டுள்ள 2 நிமிட ஆடியோவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில்  தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!


ஆடியோ பதிவில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின்  கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், சட்ட அமைச்சர் ஆசம் தரார், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் முன்னாள் சபாநாயகர் அயாஸ் சாதிக் ஆகியோருக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கும் இடையேயான உரையாடல்கள் உள்ளளன.


இதற்கிடையில், பிரதமர் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் சம்பந்தப்பட்ட நவாஸ்  ஆடியோ கசிவுகள் குறித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.கசிந்த ஆடியோ தொடர்பான விசாரணையில் அனைத்து நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என்று சனாவுல்லா கூறினார். பிரதமர் மாளிகையின் பாதுகாப்பு மீறப்பட்டதா இல்லையா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!


மேலும் படிக்க | ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ