பாகிஸ்தான் பேரழிவு; பிரதமர் மோடியின் ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்த ஷாபாஸ் ஷெரீப்!
பாகிஸ்தானில் இது வரை இல்லாதல் அளவிற்கு பெய்யும் பருவ மழையால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து விட்டனர். 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாக்கிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் குறித்த அக்கறையை பாராட்டிய அவர், தனது நாடு இயற்கை பேரழிவினால் ஏற்படுள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் என்று கூறினார்.
பாகிஸ்தானில் இது வரை இல்லாதல் அளவிற்கு பெய்யும் பருவ மழையால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து விட்டனர். 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஏழில் ஒரு பங்கினர் இடம்பெயர்ந்துள்ளனர்.
"வெள்ளத்தால் ஏற்பட்ட மனித மற்றும் பொருள் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இன்ஷாஅல்லாஹ், பாகிஸ்தான் மக்கள், இந்த இயற்கை பேரிடரை சமாளித்து, அவர்களின் வாழ்க்கையையும் சமூகத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்," ந்ன பிரதமர் ஷெரீப், தனது ட்வீட்டில் கூறினார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டு வருத்தமடைந்ததாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
"பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று நம்புகிறோம்" என்று மோடி ட்வீட் செய்தார்.
முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பேரழிவைச் சமாளிக்க 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என முறையீடு செய்தது.
மேலும் படிக்க | பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா
மேலும் படிக்க: Tamilnadu Split : இரண்டாக பிரிகிறதா தமிழ்நாடு? பா.ஜ.க-வின் திட்டம் என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ